காலத்திற்கும் மறையாதது:


 கண் விழித்து பார்த்தால்

கண்ணாமூச்சி ஆடிய முகங்கள்

தோன்றியதை கண்டு மனம் பதற,

கைகளில் அடங்காத துன்பங்கள்

தவிக்கச் செய்கிறதே 

இன்பமான நொடிகள் விரலில்

எளிதாக கணக்கு போட்டு விடலாம்.


கற்றது வெளி உலகம் பாடங்கள் அல்ல 

எது சரி தவறு தராசுகளும் குழப்பத்தில் நிற்க,

காலம் கடந்து கிடைத்த பொக்கிஷங்களை  கண்களில் செதுக்கி வைத்திருக்கிறேன்.


எதிர்காலம் ஆச்சரியங்களை வரிசை படுத்தும் என்பதில் நம்பிக்கை என்னுள் பலமாக இருக்கையில்,

கடந்து சென்ற நாட்கள் சொல்லி கொடுத்த பாடங்கள் 

எப்பொழுதும் நீங்காத மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


இவ்வருடம் எத்தனையோ பாரங்கள்

என்னை விட்டு விலகிச் சென்று வாழ்த்தியிருக்கிறது

ஏங்கிய விஷயங்கள் நடந்து இருக்கிறது,

புதுமைகளை மட்டும் நேசிக்கும் மனதிற்கு 

வாய்ப்புகள் வரவேற்கிறது.

இனி நாட்கள் என்னை கொண்டாடும்

தகுதியை வளர்த்து கொண்டு

தவறுகளை திருத்தி வாழும் நொடிகள் இனிதே தொடங்கியுள்ளது.



எதிர்பார்ப்பு என்கிற பிம்பத்தை முற்றிலும் உடைத்து

குறைவான மதிப்பெண்களை மனதில் மனப்பாடம் செய்யாமல்,

சிறிய முயற்சிகள் சிந்திக்க வைக்கும்

தருணங்களை

எதிர்பார்த்தால் போதுமானது வேகத்தை கூட்டும் சிறந்த ஆற்றல் என்னை வந்து சேரும் என்பதை புரிந்துக் கொண்டேன்.


வாழ்வின் முக்கியமான புரிதல்கள் இப்பொழுதாவது என்னை உறைக்க செய்ததே,

என்பதுதான் எல்லையில்லா ஆனந்தமும்

தொலைத்தது மீண்டும் கற்று மீட்கத்தான் என்கிற ஆயுதம் இவ்விரண்டும் இந்த ஆண்டின் எனது பெயரில் சிறந்த புத்தகமாகும்.


                                   - Sparsha KM

Comments